Followers

Wednesday, October 21, 2009

அவளுள்அடக்கம்!!!

 காற்றுக்கு ஒரு சவால்...
அவள் கண்இமை அசைவுகள் என்னை சாய்த்துவிடும்,
உன்னால் முடியுமா??
நெருப்புக்கு ஒரு சவால்...
அவள் ஆசை சொற்கள் என்னை உருக்கிவிடும்,
உன்னால் முடியுமா??

கடலுக்கு ஒரு சவால்...
அவள் கண்ணிரு துளிகள் என்னை மூழ்கடிக்கும்,
உன்னால் முடியுமா??

மண்ணுக்கு ஒரு சவால்...
அவள் இதயம் போதும் என்னை புதைத்துவிட,
உன்னால் முடியுமா??

விண்ணுக்கும் ஒரு சவால்...
அவள் காதலால் நான் வளர்வேன் உன்னையும் தாண்டி
தடுக்க உன்னால் முடியுமா??
வீண் போட்டி எதற்கு? என் பஞ்சபூதமும் அவளுள் அடக்கம்!!!!

Sunday, October 11, 2009

ஏக்கங்கள்!!!

காதலை தேடி என் முதல் பயணம்!
காண்பவை அனைத்திலும் உந்தன் தரிசனம்!!
தேவையோ எனக்கு உந்தன் கரிசனம்!!!

உன்னால் என் மனமோ அலைப்பாய!
உன்னை தேடியே என் கண்களும் ஓய!!
தேவையோ உந்தன் தோள்கள், என் தலை சாய!!!
என் காதலும் நேசமும் உனக்கு மட்டும்!
அன்பும் அக்கறையும் உனக்கு என்றும் கிட்டும்!!
உன் காதல் வார்த்தைகள் என்று என்னை எட்டும்?!!!


கண்டேன் காதலை எல்லாம் உன்னால்!
உலகையும் வெல்வேன் உன்னால் ஒரு நாள்!!
உன் காதலை கேட்கும் அந்நாள் என் திருநாள்!!!


காதல், கனிவு, பாசம், நேசம்!
இவை நீ தந்தால் என் வாழ்வும் மனம் வீசும்!!
அன்று தான் என் மௌனமும் மொழி பேசும்!!!




Saturday, October 10, 2009

ஆதங்கம்..

மனிதர்களே ,
உங்கள் உணவை நீங்கள் சரியாக வாயில் போடும் போது,
என் உணவை மட்டும் தரையில் போடுவது ஏன்??

-- இப்படிக்கு குப்பை தொட்டி..

Friday, October 9, 2009

ஆல்ப்ஸ்..

ஏ ஆல்ப்ஸ் சிகரமே!!!
எங்கள் மக்களுக்கு உடுத்த உடை இல்லை.
உனக்கு
பனியில் போர்வை தேவை தானோ?

அகராதி!!!


என்னை நான் அர்த்தம் காண,
உன்னை என் மனம் தேடுகிறதே??
உன்னை என் அகப்பாதி என்று நினைத்தேன்,
இல்லை நீ தான் என் அகராதி!!!

Thursday, October 8, 2009

யார் நீ?

செவிக்கு உயிர் தந்த இசைத்தமிழ் நீ !!!
கண்ணில்நிறைந்திருக்கும் கன்னித்தமிழ் நீ!!!
சொல்லால் சுவையூட்டும் சொற்றமிழ் நீ !!!
நான் உயிரென நேசிக்கும் நற்றமிழ் நீ !!!
பொக்கிஷமாய் நான் போற்றும் பொற்றமிழ் நீ !!!
பெண் உருவில் தேவதை நீ !!!
கண்ணுக்கு தெரிகின்ற கடவுள் நீ!!!
காதலை சொன்ன புது காவியம் நீ !!!
எனை ஆளும் அரசியும் நீ !!!
வேள்வியின் பொருளும் நீ !!!
வெற்றியின் வழியும் நீ !!!
தாயும் நீ , என் சேயும் நீ !!!
என் உயிரும் நீ !!!
நீ இன்றி நான் இல்லை,
நீயும் நானும் வேறில்லை,
இதை உணர்ந்த பின் நானாக நான் இல்லை :)

சமர்ப்பணம்!!!

பாசம் பொழியும் பாவைக்காக!
அன்பை அருளும் அழகிக்காக!
தென்றாலாய் தீண்டிய தாரகைக்காக!
மகிழ்ச்சியை மல்கிய மங்கைக்காக!
பூபோல் புன்னகைக்கும் பூவைக்காக!
மாற்றமாய் மனம் நுழைந்த மடந்தைக்காக!
உயிருள் உறைந்த உறவுக்காக!
ஆம் தேவதையே உனக்காக சமர்ப்பணம்
"என் காதலும், எதிர் காலமும்"!!!